நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளுக்கு 75 கோடி பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரணை கோருகிறார் பிரதியமைச்சர் பைசால் காசிம்.
விஜேதாச ராஜபக்சவின் புதல்வர் தனது முகப்புத்தகத்தில் வெளியான தகவலின் பின்னணியிலேயே இச்செய்தி அன்றைய தினம் பரவியிருந்தது. எனினும், இது சேறுபூசுவதற்காகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பரப்புரையென நேற்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ள பைசால் காசிம், இது தமது சிறப்புரிமையை மீறும் செயல் எனவும் சுட்டிக்காட்டி விசாரணை கோரியுள்ளார்.
போட்டி முஸ்லிம் கட்சிகளின் அரசியல்வாதிகள் பணத்துக்கு விலை போவதாக சமூக மட்டத்தில் பரவலான குற்றச்சாட்டும் சலிப்பும் உள்ளதால் குறித்த தகவல் பெருமளவு அன்றைய தினம் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment