சிரியா, கிழக்கு கோதா பகுதியில் இரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதல் சம்பவம் ஒன்றில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவத்துக்கு உடனடியாக கருத்துக் கூறியுள்ள அமெரிக்கா, சிரிய அரசுக்கு முழு ஆதரவை வழங்கி வரும் ரஷ்யாவே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதேவேளை, முன்னதாக உயிரிழந்தோர் தொகை 150 என தகவல் வெளியிடப்பட்டிருந்தமையும் பின்னர் அதன் தொகை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில் மூச்சுத் திணறிலினாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இரசாயன தாக்குதலே காரணம் எனவும் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment