திட்டமிட்ட வகையில் ரோஹிங்ய முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்து வரும் மியன்மார் பாரிய சர்வதேச அழுத்தங்களின் பின்னணியில் கடந்த வருடம் இடம்பெற்ற மனிதப் பேரழிவு தொடர்பில் ஏழு இராணுவத்தினருக்கு சிறைத்தண்டனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இன்டின் கிராமத்தில் 10 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமது அதிகாரிகள் தொடர்புபட்டிருப்பதாக முதற்தடவையாக ஒப்புக் கொண்டுள்ள மியன்மார் இராணுவம் இத்தண்டனையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கிறது.
நான்கு உயரதிகாரிகள் உட்பட ஏழு பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ நீதிமன்றமே இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment