ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மாதாந்தம் நடாத்தி வரும் ஊடக செயலமர்வு நேற்றைய தினம் (31) கல்எலிய பெண்கள் அரபிக் கல்லூரியில் அமைப்பின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்றது.
21ம் நூற்றாண்டில் ஊடகத்துறை எனும் தலைப்பில் இடம்பெற்ற இச்செயலமர்வில் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் சுமார் 350 மாணவியர் கலந்து கொண்டனர்.
இதன் போது செயலமர்வில் கலந்து கொண்டோருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு கல்லூரி முகாமைத்துவ சபை தலைவர் எஸ்.ஏ.சிஎம் சுபைர், கல்லுாாி அதிபா் எஸ். பரீதா, சட்டத்தரணி சல்மான் றியாழ் மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளா் சாதிக் சிகான், பிறவ்ஸ் முஹம்மத், சிரேஷ்ட அறிவிப்பாளர் பர்ஹான் பீபி உட்பட பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-அஷ்ரப் ஏ சமத்
-அஷ்ரப் ஏ சமத்
No comments:
Post a Comment