எல்லைப் பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வரும் நிலையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இன்றும் மூன்று பலஸ்தீன இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
ஆக்கிரமிப்பு நிலங்களை விட்டு (1948) இஸ்ரேல் விலக வேண்டும் எனக் கோரி மார்ச் 30ம் திகதி முதல் வெள்ளி தோறும் இடம்பெற்று வரும் பாரிய ஆர்ப்பாட்டங்களின் தொடர்ச்சியிலேயே இன்றும் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் இஸ்ரேலியர்களின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகியுள்ளதுடன் 300 பேர் வரை காயமுற்றிருப்பதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment