3 வருடங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்: ஹிஸ்புல்லா - sonakar.com

Post Top Ad

Monday, 2 April 2018

3 வருடங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்: ஹிஸ்புல்லா


எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றப் போவதாக தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா.

இது குறித்து அவர் அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில்:

கடந்த தேர்தல் காலங்களில் எமது மக்களின் தேவைகள் - அபிவிருத்தி தொடர்பாக நாங்கள் பல்வேறு வாக்குறுதிகளையும் - மும்மொழிவுகளையும் வழங்கியிருந்தோம். நாங்கள் எவற்றையெல்லாம் செய்வதாக வாக்குறுதி வழங்கினோமோ அவை அனைத்தையும் அல்லாஹ்வின் உதவியோடு எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் முழுமையாக இந்த மண்ணிலே நிறைவேற்றி ஒரு புதிய யுகத்தை நோக்கி இந்த மண்ணை நகர்த்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம். அதற்கான ஒத்துழைப்புக்களை ஆளுனர் உள்ளிட்ட அனைவரும் வழங்க வேண்டும் என கோட்டுக்கொள்கின்றேன்.



அரசியல் ரீதியாக நாங்கள் மிக முக்கியமான கால கட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணை என்ன நடந்தாலும் பல்வேறுபட்ட அரசியல் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகளுக்கும் நாங்கள் முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அண்மையில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் மீண்டும் இந்த நாட்டிலே ஏற்படாத வகையில் அரசியல் சூழ்நிலைகள், ஸ்தீரமான ஆட்சி இந்த நாட்டிலே இருக்க வேண்டும் என்பதில் நாங்கள்  உறுதியாக இருக்கின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment