கனடா, டொரன்டோ வடக்கு பகுதியில் பாதசாரிகள் மீது வேனால் மோதி 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்தின் பின்னணியில் ஆயுதம் தாங்கிய சந்தேக நபரை எதுவித துப்பாக்கிப் பிரயோகமுமின்றி கைது செய்துள்ளனர் அந்நாட்டின் பொலிசார்.
குறித்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் வரை காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், 25 வயது அலக் மினேசியன் என அறியப்படும் நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபரை பொலிஸ் அதிகாரி நெருங்கிய போது தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக மிரட்டிய போதிலும் துணிகரமாக இயங்கிய பொலிஸ் அதிகாரி சந்தேக நபரை அடிபணிய வைத்ததுடன் துப்பாக்கி வேட்டுக்கள் எதுவுமின்றி கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment