இன்று காலை 06 மணி வரையான 24 மணி நேர கால எல்லைக்குள் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து விதி முறைகளை மீறிய 10,147 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.
இக்காலப்பகுதிக்குள் 233 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதோடு பெரும்பாலானவை மது போதையில் வாகனத்தை செலுத்தியதாலேயே ஏற்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பண்டிகைக் காலங்களில் இவ்வாறான விபத்துகள் அதிகரிக்கும் வழக்கம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment