கொடகே புத்தக நிறுவனம் நடத்திய 2017 ஆம் ஆண்டுக்கான கையெழுத்துப் பிரதிப் போட்டியில் சிறந்த நாவலுக்கான கையெத்துப் பிரதியாக தெரிவுச்செய்யப்பட்ட பிரமிளா பிரதீபனின் "கட்டுபொல்" மற்றும் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான கையெத்துப் பிரதியாக தெரிவுச் செய்யப்பட்ட பூகொடையூர் அஸ்மாபேகத்தின் 'போகிற போக்கில்' ஆகிவற்றுக்கான விருது வழங்கும் விழாவும், நூல்களின் வெளியீடும் கடந்த 05.04.2018 வியாழன் அன்று பிற்பகல் 3.00 மணிக்கு,கொழும்பு 7 யில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது,
பிரமிளா பிரதீபன், பூகொடையூர் அஸ்மா பேகம் ஆகியோருக்கு தேசப்பந்து சிரிசுமன கொடகே விருதுகளையும் நூல்களையும், வழங்கினார்.
பிரமிளா நூலின் முதற்பிரதியினை இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக் கொண்டார். , தமிழில் வரவேற்புரையை மேமன்கவியும், தமிழில் சிறப்புரையை திக்குவல்லை கமாலும் ஆற்றினார்கள்.
-A.Razak
No comments:
Post a Comment