2016ல் போக்குவரத்து பொலிஸ் பெற்ற லஞ்சம் 3.2 பில்லியன் ரூபா! - sonakar.com

Post Top Ad

Wednesday, 11 April 2018

2016ல் போக்குவரத்து பொலிஸ் பெற்ற லஞ்சம் 3.2 பில்லியன் ரூபா!


2016ம் ஆண்டில் மாத்திரம் ஸ்ரீலங்கா பொலிசின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் 3.2 பில்லியன் ரூபா லஞ்சமாகப் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அனைத்திலங்கை மோட்டர் சைக்கிள் பாவனையாளர்கள் சங்கம்.



பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பொலிசாரின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் அலைவதை விட லஞ்சத்தைக் கொடுத்து விட்டு நேரத்தை சேமிப்பதே வழியென வாகன பாவனையாளர்கள் கருதுவதாகவும் அனேகமான சந்தர்ப்பங்களில் புனையப்பட்ட தவறுகளுக்கே இவ்வாறு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சராசரியாக ஒரு நாளைக்கு 10-20 முறைப்பாடுகள் இவ்வாறு கிடைக்கப் பெறுவதாகவும் பண்டிகைக் காலத்தில் 50-60 முறைப்பாடுகளாக அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment