தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்தொன்று தடம் புரண்டதில் 18 பேர் காயமுற்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு பின்னதுவ பகுதியில் வைத்து இன்று காலை 7.30 அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மீகஹதன்னயிலிருந்து கதிர்காமம் சென்ற யாத்திரிகர்களே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் காயமுற்றோர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment