தலை மன்னார் ஊடாக சுமார் 170 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தைக் கடத்த முயன்ற மூன்று இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது கடற்படை.
24.2 கிலோ கிராம் தங்கத்தை கடல் மார்க்கமாகக் கடத்த முயன்ற நிலையிலேயே கடற்படையினரால் இம்முயற்சி முறியடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட தங்கம் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment