குரூப் 16 'பம்மாத்து' காட்டுகிறது: ரஞ்சன் விசனம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 11 April 2018

குரூப் 16 'பம்மாத்து' காட்டுகிறது: ரஞ்சன் விசனம்!


ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்த ஸ்ரீலசுக உறுப்பினர்கள் பம்மாத்து காட்டி வருவதாக விசனம் வெளியிட்டுள்ளார் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.



அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ள நிலையில் விலகப் போவதாக அறிவித்து விட்டும் தொடர்ந்தும் பதவிகளில் தொங்கிக் கொண்டிருப்பதாகவும் குரூப் 16 மீது ரஞ்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விரும்பியவர்கள் விரும்பலாம் என கட்சி அறிவித்தும் கூட இவர்கள் நாடகமாடுகிறார்கள் எனவும் ரஞ்சன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment