பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்ததன் பின்னணியில் தாம் எதிர்க்கட்சியில் சென்று அமரப் போவதாகவும் அரசை விட்டு விலகி விட்டதாகவும் தெரிவித்து வருகின்ற போதிலும் நேற்று முன் தினம் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் குரூப் 16 உறுப்பினர் மௌனிகளாகவே இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த நபர்களின் கட்சித் தாவலும் தற்போது கேள்விக்குறியாகியுள்ள அதேவேளை மஹிந்த ராஜபக்ச வரவேற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
மே தின நிகழ்வுகள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கு முகங் கொடுப்பது குறித்து ஆராயப்பட்டதேயன்றி குரூப் 16 விவகாரம் பேசப்படவில்லையென்பதை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் வைத்து உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment