நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணிலுக்கு எதிராக வாக்களித்த வேகத்தில் தனியான மேதின நிகழ்வையும் ஏற்பாடு செய்யப்போவதாக அறிவித்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குரூப் 16, ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் தாமும் கட்சியின் மேதின கொண்டாட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கிறது.
இம்முறை மட்டக்களப்பு, செங்கலடியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கொண்டாட்டம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் குரூப் 16 தொடர்ந்தும் கட்சியோடு இணைந்திருக்கவுள்ளதாக தெரிவிக்கிறது.
இதேவேளை நாடாளுமன்ற தவணை ஆரம்பமானதும் மே 8ம் திகதி தாம் தீர்க்கமான முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் குறித்த குழுவினர் தெரிவிக்கின்றமையும் இவர்கள் தம்மோடு இணைந்து கொள்வார்கள் என மஹிந்த தரப்பு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment