நம்பிக்கையில்லா பிரேரணையின் போது பிரதமரை எதிர்த்து வாக்களித்ததன் பின்னணியில் அரசை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள ஸ்ரீலசுகட்சியின் குரூப் 16, மஹிந்த அணியுடன் இணைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொள்ளும் என பரவலான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், குரூப் 16 நபர்கள் இதுவரை தம்மை விமர்சித்ததையெல்லாம் தாம் மறந்து விட்டதாகவும் தொடர்ந்தும் ஆட்சியிலிருப்பவர்களை விட இவர்கள் ஒன்றும் மோசமாக திட்டவில்லையெனவும் தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லையென்பதற்கேற்ப மஹிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த தயாசிறி ஜயசேகர, எஸ்.பி திசாநாயக்க, டிலான் பெரேரா உட்பட்ட குழுவினர் மீண்டும் கூட்டிணைவவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment