மைத்ரி தலைமையிலான ஸ்ரீலசுகட்சியிலிருந்து தம் பக்கம் வருகை தரவிருக்கும் 16 பேரையும் வரவேற்கக் காத்திருப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
பொலன்நறுவயில் புதுவருட சம்பிரதாய நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் உரையாடும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், குரூப் 16ன் அனைவரும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது உறுதியெனவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, தொடர்ந்தும் தாம் மைத்ரியுடன் இணைந்திருந்து அரசை ஸ்திரப்படுத்தவுள்ளதாக மைத்ரி அணி சு.க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment