நம்பிக்கையில்லா பிரேரணையின் போது அதனை ஆதரித்து வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்துள்ளது.
நேற்றிரவு கூடிய குறித்த குழுவினர் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்த அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி தரப்பிலிருந்து தாம் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருவதாக முறைப்பாடும் முன் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினரோடு தொடர்ந்தும் இயங்க முடியாது எனவும் இக்குழு பதவி நீக்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment