பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது 12 மணி நேர விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தினை அடிப்படையாகக் கொண்டு மேலும் பல குற்றச்சாட்டுகளடங்கிய பிரேரணை மீது அனைவரும் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் இவ்வாறு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த காலங்களிலும் சபையில் அமளியில் ஈடுபடுவதன் மூலம் கூட்டு எதிர்க்கட்சியினர் தாமே சபை அமர்வுகளை ஒத்தி வைக்கக் காரணமாக இருந்துள்ளமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment