முஸ்லிம்களின் பிரச்சினை: ஐ.நாவில் தமிழ் - சிங்கள தரப்பு சூடான வாதம்! (video) - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 March 2018

முஸ்லிம்களின் பிரச்சினை: ஐ.நாவில் தமிழ் - சிங்கள தரப்பு சூடான வாதம்! (video)


ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 37வது மாநாடு இடம்பெற்று வரும் நிலையில் பக்கவாட்டில் இடம்பெற்ற ஒன்று கூடல் ஒன்றில் இலங்கையில் முஸ்லிம்கள் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வருவது தொடர்பிலான பேச்சின் பின்னணியில் தமிழ் - சிங்கள தரப்பு சூடான வாதங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளது.



தற்போது தொடரும் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை குறித்து நாடு கடந்த தமிழீழ அமைப்பு சார்பில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்க்கருத்து வெளியிட்ட டொக்டர் நாலக கொடஹேவ 1991 யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டமை மற்றும் காத்தான்குடி படுகொலைகள் குறிததும் சுட்டிக்காட்டி யார் யாருக்காக குரல் கொடுப்பது எனும் தொனியில் கருத்துரைக்கச் சென்றதன் விளைவில் இரு தரப்பும் சூடான வாதங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

இதன் போது ஐ.நா முன்றலில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையைத் தான் கண்டதாகவும் நாலக கொடஹேவ தெரிவித்திருந்தார். இச்சூழ்நிலையில் இரு தரப்பும் முறுகலில் ஈடுபட்டு கூட்டம் கலைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment