பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பது என ஐக்கிய தேசிய்க கட்சி ஒரு மனதாக முடிவெடுத்துள்ள நிலையில் வாக்களிப்பில் நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் ஆதரவு கிடைக்கும் என மஹிந்த அணி தொடர்ந்தும் தெரிவிக்கிறது.
ஆகக்குறைந்தது 27 பேர் மறுபுறத்திலிருந்து ஆதரவளிப்பார்கள் என திடமாக தெரிவிக்கின்ற கூட்டு எதிர்க்கட்சி ரணிலை பதவி நீக்கக் கோரி பாதயாத்திரை செல்லவும் தயாராகி வருகிறது.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு ரணிலை ஆதரிக்கத் திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment