கடந்த சனிக்கிழமை ஐக்கிய இராச்சியத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக ராஜதந்திர அழுத்தத்தை உருவாக்கும் வகையில் தமது பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்கள் ஊடாக அரசின் கவனத்தைப் பெறும் முயற்சி ஐக்கிய இராச்சியத்தின் பல பாகங்களிலும் இடம்பெறுகிறது.
இந்நிலையில், இன்றைய தினம் க்ரோலி பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹென்றி ஸ்மித்தை அப்பகுதியில் இயங்கும் இலங்கை முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பின் பிரதி தலைவர் ஜாபிர் ஹமீத், க்ரோலி முஸ்லிம் நலன்புரி அமைப்பின் தலைவர் முஹம்மத் காதர், மற்றும் அமைப்பின் செயலாளர் நலீம் ஹமீத், இலங்கை முஸ்லிம் அமைப்பின் தலைவர் முஹம்மத் சகீர் மற்றும் ஆகியோர் சந்தித்து இலங்கை முஸ்லிம்களின் நிலை தொடர்பான ஆவணம் ஒன்றைக் கையளித்தனர்.
அத்துடன் எதிர்வரும் 17ம் திகதி பரிஸ் நகரிலும் 19ம் திகதி ஜெனிவா, ஐ.நா முன்றலிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment