ஐக்கிய தேசியக் கட்சி தவறு செய்ததாக பிரச்சாரம் செய்து மக்களிடம் வாக்கைப் பெற்று விட்டு அதே ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என காலி மாநகர சபைக்கு பெரமுனவில் தெரிவான உறுப்பினர் குமார தம்மிக போர்க்கொடியுயர்த்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை முழுமையாக விமர்சித்து தேர்தலில் போட்டியிட்டு விட்டு தற்போது ஆட்சியதிகாரத்தைப் பெறுவதற்காக அதே ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து, பிரதி மேயர் பதவியையும் ஒப்படைத்திருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
காலி - நீர்கொழும்பைத் தொடர்ந்து மேலும் சில இடங்களில் பெரமுன - ஐக்கிய தேசியக் கட்சியிடையே கூட்டாட்சி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment