பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இவ்வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இதுவரை 35 பேர் கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியினர் உட்பட பெரும்பான்மையானோர் இப்பிரேரணைக்கு ஆதரவளிப்பர் எனவும் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து விரட்டுவது உறுதியெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க.
அடிமட்ட மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க மறுக்கும் முதலாளித்துவ அரசை நிர்வகிக்க முனையும் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் கட்சி மட்டத்திலும் பாரிய வெறுப்பு நிலவுகிறது.
2015 பொதுத் தேர்தலை வென்ற போதும் அதனைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் வாக்குறுதிகளை நிறைவேற்றாது இழுத்தடித்ததோடு மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தினால் கட்சி மீதான நம்பிக்கையையும் மக்கள் இழந்துள்ளளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்களே வெளிப்படையாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment