இன விரோத வன்முறை: ஐ.நாவில் MRG வாய்மூல அறிக்கை - sonakar.com

Post Top Ad

Friday, 16 March 2018

இன விரோத வன்முறை: ஐ.நாவில் MRG வாய்மூல அறிக்கை



யாழ் சர்வதேச முஸ்லிம் சமூக அமைப்பின் வலியுறுத்தல் மற்றும் ஆவண ஒத்துழைப்புடன் சிறுபான்மையினர் உரிமைகளுக்கான சர்வதேச குழுமம் நேற்று 14.03.2018 -  புதன்கிழமை, ஐ.நா வின் 37 வது மனித உரிமைகள் சபையின் அமர்வில் வெளியிட்ட வாய்மூல அறிக்கையின் தமிழாக்கம்.

சிறுபான்மையினர் உரிமைகள் குழுமமானது, கடந்த சில வாரங்களாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற மத வன்முறை தொடர்பாக இந்தச் சபையின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறது.

பெப்ரவரி மாத இறுதியில், அம்பாறையின் கிழக்கு நகரில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தொடர்ந்து, மத்திய மாகாணத்தின் கண்டியில் மார்ச் 5 ம் திகதி வன்முறைகள் வெடித்தன. ஒருவர் கொல்லப்பட்டும், ஒரு பள்ளிவாயல் தாக்கப்பட்டும், முஸ்லிம்களுக்கு சொந்தமான பல வியாபரஸ்த்தளங்கள் தீயிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.குறித்த சம்பவங்கள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இனவாத வன்முறைத் தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளதுடன், வன்முறை பரவுவதைத் தடுக்கும் முகமாக, ஜனாதிபதி அவர்கள் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். ஆயினும், நாட்டின் கடந்தகால மத ரீதியான பதட்டத்தின் படி, சனத்தொகையின் சுமார் 10 வீதத்தைக் கொண்டுள்ள சிறுபான்மை முஸ்லிம் சமூகம் குறித்து சிறுபான்மையினர் உரிமைகள் குழுமம் மிகுந்த கரிசனை கொள்கிறது.

சிறுபான்மையினர் உரிமைகள் குழுமத்தின் அண்மைய அறிக்கையொன்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதன் படி, 2009 ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததிலிருந்து, தேசியவாத பௌத்த இயக்கங்களின் எழுச்சியால் தீவிரமடைந்த, முஸ்லிம்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ள பரந்த அளவிலான தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே இந்த சம்பவங்கள் உள்ளன. வன்முறைச் சம்பவங்களும் வெறுப்புப் பிரச்சாரங்களும் சமூக ஊடகங்களில் வழமையாகிவிட்டதுடன், அரசாங்கத் தரப்பின் தண்டனை பயமின்றியும் இடம்பெறுகிறது, அத்துடன் அது குற்றம் புரிபவர்களையும் தூண்டுகிறது.

வன்முறைகளை கண்டித்து, அதற்கு நடவடிக்கைக்கு எடுக்கக்கோரும் அரசாங்க தரப்பினரின் அண்மைய அறிக்கைகளை வரவேற்கும் அதேவேளை, வெறுப்புப் பேச்சு பரவுவதற்கு பொறுப்பானவர்களையும், வன்முறையில் ஈடுபடுகிறவர்களை கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்றன உள்ளடங்களான, பொறுப்புகூறல் மற்றும் முஸ்லிம்களின் சட்டப் பாதுகாப்பை உறுதிபப்படுத்தும் துரிதமான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளே தேவையாக உள்ளன.


இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் மீது சட்டத்தின் முழு வலிமையையும் பிரயோகிக்கும் படி இலங்கை அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். சமாதானமான, நிலைபேறான எதிர்காலத்தை நோக்கி இலங்கை நகர வேண்டுமாக இருந்தால், அரசாங்கமும், மதத் தலைவர்களும், சட்ட அமுலாக்கத் துறையும் மத-இன வன்முறையை கையாள்வதற்கும், ஒன்றுபட்ட சமூகங்களை கட்டியெழுப்புவதற்கும் காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தமது தெளிவான அர்ப்பணிப்பை காட்ட வேண்டும், சகல மதம் சார்ந்த சமூகங்களினதும் உரிமைகளை பாதுகாக்க பாடுபடல் வேண்டும்.

-Fasleem Suhood

No comments:

Post a Comment