பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டு வந்துள்ள நிலையில் தமது தலைவர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அனைதது ஐ.தே.க உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளதாக அக்கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக பாலித ரங்கே பண்டார மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோர் வெளிப்படையாகவே ரணிலுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தனர்.
எனினும், அவர்கள் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment