![](https://i.imgur.com/rgSPIum.png?1)
நாவலபிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை இடம் மாற்றக் கோரி நாடாளுமன்ற உறுப்பினா ஆனந்த அளுத்கமகே வீதியில் படுத்துறங்கி நூதன போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
காலை 5 மணி முதல் அவர் இவ்வாறு வீதியில் படுத்துறங்கிய காரணத்தினால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மாற்றப்படும் வரை தனது போராட்டம் ஓயப்போவதில்லையென தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினருடன் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ள நிலையில் தனக்கான முடிவு கிட்டும் வரை போராடப் போவதாகவும் ஆந்த மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment