இலங்கை விவகாரத்தில் எப்போதும் தலையிட விரும்பிய போதிலும் தற்போது இந்திய அரசுக்கு இனம் புரியாத அச்சம் இருப்பதாக தெரிவிக்கிறார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.
தமது சகோதரன் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ராஜதந்திரிகள் இலங்கை வந்தால் அவர்கள் எதிர்க்கட்சியினரையும் சந்திக்கும் வழக்கம் இருந்ததாகவும் ஆனாலும் தற்போது இந்திய ராஜதந்திரிகள் அவ்வாறு நடந்து கொள்வதில்லையெனவும் அச்சப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புலிகள் அமைப்பின் தலைவருக்கு போதிய 'ஞானம்' இருந்திருந்தால் கே.பியைப் போன்று புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருப்பார், அவர் அப்படியானவர் இல்லையெனவும் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கோத்தா மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment