பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் தோல்வியென துவண்டு கிடந்த அரசாங்கம் தொடர்பிலான மக்கள் விமர்சனங்கள் தற்போது அம்பாறை மற்றும் கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மூலம் மறக்கடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள கூட்டு எதிர்க்கட்சி விரைவில் அதனை நாடாளுமன்றுக்குக் கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கிறது.
இதேவேளை, நாட்டில் இன்னும் இனவாத அலை வீசிக்கொண்டிருக்கின்றமையும் அச்ச சூழ்நிலை தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment