கொழும்பு, தெஹிவளை, சோனகர் தெருவில் அமைந்துள்ள மீலாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் கடந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியிருந்த அனைத்த மாணவர்களும் இம்முறை உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றிருப்பதாக மீலாத் கல்வி சமூகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இப்பாடசாலை மாணவன் ஆர்.எம். முசர்ரப் 9ஏ சித்தி பெற்று பாடசாலை மட்டத்தில் சாதனை படைத்துள்ளார். முதல்வர் ஜனாப்.எம்.எஸ்.எம்.சுஹார் வழிகாட்டலில் இம்முறை பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
கடந்த வருடத்தை விட இவ்வருடம் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகள் பெறப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் முன்னர் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-TM. Imthiyas
No comments:
Post a Comment