Gampaha Football League: கஹட்டோவிட்ட அணிக்கு வெற்றி! - sonakar.com

Post Top Ad

Sunday, 25 March 2018

Gampaha Football League: கஹட்டோவிட்ட அணிக்கு வெற்றி!



கம்பஹா ஶ்ரீ போதி மைதானத்தில் நடைபெற்ற Gampaha Football League இன் இறுதிப் போட்டியில் Kahatowita Football Club (KFC) அணி வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. 

இறுதிப் போட்டியில் KFC அணியுடன் Weliveriya Dynamic அணி மோதியது. போட்டியின் இறுதியில் KFC அணி 2 - 1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. 


போட்டியின் சிறந்த வீரருக்கான விருதை  KFC அணியின் நஸீர் பெற்றுக்கொண்டார். சம்பியன் கிண்ணத்தை அணியின் தலைவர் ஸிமாம் மற்றும் உப தலைவர் ஹஸீப் இணைந்து பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் Football Federation of Sri Lanka இன் முக்கிய பிரமுகர் உள்ளிட்ட அதிதிகளுடன் இரு அணிகளினதும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.  

- கஹட்டோவிட்ட ரிஹ்மி

No comments:

Post a Comment