கண்டியில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைத் தாக்குதல்களின் பின்னணியில் கண்டி மாவட்ட டிஐஜி விக்ரமசிங்கவே இருப்பதாக இனவாதி அமித் வீரசிங்கவின் மனைவி தெரிவித்த கருத்துக்கள் தற்போது அரசியல் மட்டத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
குறித்த டிஐஜியே தனது கணவரை அன்றிரவு சம்பவ இடங்களுக்கு வருமாறு அழைத்ததாக அமித்தின் மனைவி தெரிவித்துள்ளதோடு டிஐஜி கணவர் அமித்தை மாட்டிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்பாது சுமன தேரரும் இதற்கு சாடசியாக முன் வந்துள்ளமையும் பொலிசார் காடையர்களுக்கு ஒரு மணி நேரம் தாக்குதல் அவகாசம் கொடுத்ததாக அமைச்சர் ஹலீம் அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment