
அம்பாறையில் இவ்வாரம் இடம்பெற்ற இனவிரோத வன்முறை தொடர்பில் அம்பாறை பொலிசார் பாரபட்சத்துடன் நடந்து கொண்டுள்ள நிலையில் இது குறித்து விசாரிக்கும் பொறுப்பை மட்டக்களப்பு மாவட்ட டி.ஐ.ஜியிடம் ஒப்படைத்துள்ளது சட்ட,ஒழுங்கு அமைச்சர்.
அம்பாறை சிங்கள வாக்குகளை பாதிக்காத வகையில் அங்கு செல்வதைத் தவிர்த்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒலுவிலில் கூட்டம் ஒன்றை நடாத்திய நிலையில் பொலிசாரின் விசாரணை அறிக்கை ( ரிப்போர்ட்) அரைகுறையானது எனவும் மீள் விசாரணை தேவையென்பது உணரப்பட்டிருப்பதாகவும் ஏலவே அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்த விடயங்களை சட்ட,ஒழுங்கு அமைச்சும் தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே விசாரணையின் பொறுப்பு இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட டி.ஐ.ஜியிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு ஊடக அறிக்கை மூலம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment