இரு வாகனங்களுடன் மோதி தியவன்ன ஓயவில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட பி.எம்.டபிள்யு சொகுசு வாகனத்தின் உரிமையாளர் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர் ஒருவரின் புதல்வரே வாகனத்தை செலுத்தி வந்ததாகவும் இரவு கேளிக்கை விடுதியொன்றிலிருந்து காலை 6 மணியளவில் குறித்த வாகனம் புறப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வழியில் வேறு இரு வாகனங்களுடன் மோதிய நிலையில் வாகனம் இவ்வாறு தியவன்ன ஓயவில் கைவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஏனைய வாகன உரிமையாளர்கள் பொலிசில் முறையிட்டுள்ள நிலையில் வாகன விற்பனை நிலையம் ஒன்று குறித்த நபர்களை அணுகி இழப்பீடு தருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment