இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் மத்தியில் நன்மதிப்பு வளர்ந்து வருகின்ற நிலையில் கடந்த ஆட்சியில் போன்றின்றி தற்போதைய அரசுக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவளிப்பதாக தெரிவிக்கிறார் அமைச்சர் பைசர் முஸ்தபா.
இந்நிலையில், அண்மையில் அம்பாறை மற்றும் கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவன்முறைகள் குறித்தும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கேள்வியெழுப்பியதாகவும் அங்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க எடுத்த முயற்சிகளுக்கு எதிராக இயங்கியவர்களை தற்போது இனங்கண்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கையெடுக்கவுள்ளதாக வாக்குறுதியளித்துள்ளதாகவும் பைசர் மேலும் தெரிவிக்கிறார்.
இலங்கை அரச பிரதிநிதிகள் குழுவில் உள்ளடக்கப்பட்ட பைசர் முஸ்தபா ஜெனிவா சென்றுள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் எதிநோக்கி வரும் இன்னல்கள் மழுங்கடிக்கப்படும் என சமூக மட்டத்தில் அச்சம் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment