நடைபெற்று முடிந்த உள்ள10ராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமானம் செய்யும் நிகழ்வு நேற்று (19) மாலை அலரி மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரனில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது கொழும்பு மாநகர சபையின் மேயராக தெரிவு செய்யப்பட்ட ரோசி சேனநாயக்க பிரதமர் முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்து கொண்டதுடன் ஏனைய 59பேரும் ஒன்றாக எழுந்து நின்று பிரதமரின் முன்னிலையில் தமது சத்தியப் பிரமானங்களை செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான டி.எம்.சவாமிநாதன், மங்கள சமரவீர, கரின் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நான்கு சமயத் தலைவர்களின் மத அனுஷ்டானங்கள் மற்றும் ஆசியுரைகளின் பின்னர் சத்தியப் பிரமான நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
-ஏ.எஸ்.எம்.ஜாவித்
No comments:
Post a Comment