![](https://i.imgur.com/FPbCnvC.jpg?1)
மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து சூறையாடி பலவீனப்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இனவன்முறைகளால் சுற்றுலாத்துறை பாரிய இழப்புகளை சந்தித்து வருகிறது.
நாட்டின் முன்னணி சுற்றுலா பயண ஒழுங்கு நிறுவனங்களூடாக மேற்கொள்ளப்பட்டிருந்த பதிவுகள் பாரிய அளவில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு வெளிநாட்டவர் நாட்டை விட்டும் அவசரமாக வெளியேறியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் தமது பிரஜைகள் வன்முறை இடம்பெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கும் படி எச்சரித்திருந்தது. இந்நிலையில், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை மாத்திரமன்றி சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment