இறைச்சிக்கான 'மாடு' போல் மஹிந்தவின் நிலை: பிமல் - sonakar.com

Post Top Ad

Sunday, 25 March 2018

இறைச்சிக்கான 'மாடு' போல் மஹிந்தவின் நிலை: பிமல்


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் பின்னணியில் மஹிந்தவை விட மைத்ரிக்கே அக்கறை அதிகம் என தொடர்ந்தும் ஜே.வி.பியினர் தெரிவித்து வரும் நிலையில் இந்த விடயத்தில் மஹிந்த ராஜபக்ச இறைச்சிக்காக இழுத்துச் செல்லும் மாடு போலாகிவிட்டார் என தெரிவித்துள்ளார் பிமல் ரத்நாயக்க.

நம்பிக்கையில்லா பிரேரணையை மஹிந்த தலைமையிலேயே கூட்டு எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் ஒப்படைத்த போதிலும் மஹிந்த ராஜபக்ச விருப்பமின்றியே அங்கு சென்றது போல் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ள பிமல், மைத்ரியின் சதியே நம்பிக்கையில்லா பிரேரணையெனவும் தெரிவித்துள்ளார்.


குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் மஹிந்த ராஜபக்ச கையொப்பமிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment