இன்று காலை கோலாலம்பூர் சென்ற விமானத்தில் 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை கடத்திச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் போது குறித்த நபரிடமிருந்து இரத்தினக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு 25,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தித்தபஜ்ஜல பகுதியைச் சேர்ந்த 44 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment