
அம்பாறை மற்றும் மத்திய மாகாணத்தில் இடம்பெற்ற இனவன்முறையால் அரசாங்கத்துக்கு கொளுத்த 'இலாபம்' என தெரிவித்துள்ளார் உதய கம்மன்பில.
கூட்டு எதிர்க்கட்சிக்கு இதனால் எந்த நன்மையும் இல்லையென தெரிவிககின்ற அவர், ரணில் மீதும் ஐக்கிய தேசியக் கட்சி மீதும் இருந்த அழுத்தம் மறக்கடிக்கப்படுவதற்கு குறித்த சம்பவங்கள் உதவியுள்ளதாக குறிப்பிடும் அவர் கூட்டு எதிர்க்கட்சி பெரும்பான்மை மக்களின் மனதை வென்றது போன்று இனி சிறுபான்மை மக்களின் மனதை வெல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை சிங்கள மக்களே இதில் தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment