கொழும்பு, புதுக்கடை பகுதியில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட தலை கொஸ் மல்லியெனும் பாதாள உலக பேர்வழியுடையது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது குறித்த நபரின் உடலைத் தேடி பொலிஸ் படையொன்று கிளம்பியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவர் வழங்கிய தகவல் அடிப்படையில் அங்குனகொலபலஸ்ஸ பகுதியில் உடல் புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையிலேயே விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு தேடலுக்காக நியமிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 16ம் திகதி புதுக்கடையில் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சில வாரங்களில் கொஸ்மல்லியின் தலையும் அப்பகுதியில் காணப்பட்டிருந்தமையும் சம்பவம் பாதாள உலக கோஷ்டி மோதல் என பொலிசார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment