பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக 52 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் இதுவரை 101 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐ.தே.க தகவல் வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 4ம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு முன்பதாக 113 பேர் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் கையொப்பமிடுவார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜே.வி.பி மற்றும் சு.க உறுப்பினர்கள் சிலரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment