கொழும்பு மாநகர சபையின் நீண்டகால உறுப்பினர், ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.ரி.எம் இக்பால் பிரதி மேயராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னராக கொழும்பின் முதலாவது பெண் மேயராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார்.
இம்முறை தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை தற்போதைய மாநகர சபை கட்டிடத்தில் கூட்டம் நடாத்துவதற்கு இடப்பற்றாக் குறை நிலவுவதால் முதற்கட்ட கூட்டங்கள் பெரும்பாலும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலேயே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-அஷ்ரப் ஏ சமத்
No comments:
Post a Comment