ஜப்பான் சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பும் வரையில் அவசர கால சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதனை நீக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னர் விமான நிலையம் வந்தடைந்த ஜனாதிபதி இதற்கான உத்தரவில் கையொப்பமிட்டதோடு உடனடியாக அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற முஸ்லிம் விரோத வன்முறைகளின் பின்னணியில் அவசரகால சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment