பேஸ்புக் 'இனவாதம்': மாணவனின் விளக்கமறியல் நீடிப்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 26 March 2018

பேஸ்புக் 'இனவாதம்': மாணவனின் விளக்கமறியல் நீடிப்பு!


முகப்புத்தகத்தில் இனவாத கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதான கொழும்பின் பிரபல ஆண்கள் பாடசாலையொன்றைச் சேர்ந்த முஸ்லிம் மாணவனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மலே சமூகத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளின் போது தனது பேஸ்புக்கில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட பின்னணியில் கைது செய்யப்பட்டிருந்தார்.


இது போன்ற குற்றச்சாட்டில் சில பாடசாலை மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, களத்தில் இறங்கி இனவாதத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் சுதந்திரமாக நடமாடுவதோடு அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திகன வன்முறையின் சூத்திரதாரிகள் சாதாரண குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழே விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment