கிரிபத்கொட: கத்தி முனையில் தனியார் வங்கியில் கொள்ளை - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 March 2018

கிரிபத்கொட: கத்தி முனையில் தனியார் வங்கியில் கொள்ளை



கிரிபத்கொட நகரில் கத்திமுனையில் தனியார் வங்கியொன்றிலிருந்து 950,000 ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் இன்று (20) மதியம் இடம்பெற்றுள்ளது.

வாடிக்கையாளர் போன்று உள்நுழைந்த குறித்த நபர் பெண் ஊழியர் ஒருவரை கத்தி முனையில் மடக்கி இக்கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment