முஸ்லிம்களுக்க எதிரான இனவன்முறை நடந்து முடிந்துள்ள கையோடு மாகாண சபைத் தேர்தலை நடாத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
வடமத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆறுமாதங்களுக்கு முன்னரே நடாத்தப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ள மஹிந்த, வேறு சர்ச்சைகளை உருவாக்குவதன் மூலம் அரசின் பிரச்சினைகளை மறக்கடிக்க முயற்சி இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், உடனடியாக தேர்தல் இடம்பெறும் சாத்தியக் கூறு இல்லையென அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment