
மத்திய மாகாணத்தில் உருவாகியுள்ள இனவன்முறைகளைக் கட்டுப்படுத்த தாம் உதவத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
வன்முறையைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டியது பொலிசாரின் கடமை எனவும் அரசாங்கம் எதைச் சொன்னதோ அதையோ பொலிஸ் செய்தது எனவும் தெரிவிக்கிறார்.
வன்முறையின் பெரும்பகுதி போது ஊரடங்கு சட்டம் மற்றும் அவசர கால சட்டமும் அமுலில் இருந்த போதே இடம்பெற்றிருந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அளுத்கம வன்முறையின் போது 'தான்' இருக்கவில்லையெனவும் வந்த பின்னர் நேரடியாக கள விஜயம் செய்து பிரச்சினைகளைத் தீர்த்து வைத்ததாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment