காலி: அந்த ஏழு பேருக்கு எதிராக விசாரணை: வஜிர - sonakar.com

Post Top Ad

Sunday, 25 March 2018

காலி: அந்த ஏழு பேருக்கு எதிராக விசாரணை: வஜிர


காலி மாநகர சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியிருந்த போதிலும் அங்கு பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த ஒருவர் முதல்வரானது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஏழுபேர் மறுபக்கம் வாக்களித்ததனாலேயே இவ்வாறு நிகழ்ந்திருப்பதாகவும் அவர்கள் தொடர்பில் கட்சி மட்ட விசாரணை இடம்பெறவுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் வஜிர அபேவர்தன.


காலி மற்றும் நீர்கொழும்பு மாநகர சபைகளை ஐக்கிய தேசியக் கட்சியே வென்றிருந்த போதிலும் அங்கு பெரமுன ஆட்சியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment