தொடர் நஷ்டத்தில் இயங்கி வந்த ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை எந்தவொரு நாடும் வெளிநாட்டு நிறுவனங்களும் பொறுப்பேற்கவோ பங்காளியாக வரவோ இல்லாத நிலையில் இனி குறித்த நிறுவனத்தை விற்பனை செய்யப் போவதில்லையென முடிவெடுத்துள்ளது அரசு.
லக்ஷ்மன் கிரியல்லவின் நேரடி பொறுப்பின் கீழ் இயங்கவுள்ள ஸ்ரீலங்கன், அரச - தனியார் கூட்டுறவு ஒப்பந்தத்தில் நடாத்தப்படவுள்ளதாகவும் மேலதிக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த அரசின் போது எமிரேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இலாபத்தில் இயங்கி வந்த ஸ்ரீலங்கன் மஹிந்தவின் ஆதிக்க நிலைப்பாட்டால் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment